தேவையான பொருட்கள் :
ரவை – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
மைதா – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சிதுண்டு – 1
சீரகம் – ½ ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு ரவை, அரிசி மாவு, மைதா, தயிர், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு போல் திக்காக இல்லாமல் தண்ணீயாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
கரைத்து வைத்துள்ள இதை 15 நிமிடங்களுக்கு மூடி போட்டு வைத்துவிடுங்கள்.
15 நிமிடங்களுக்கு பிறகு மாவில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் தோசை கல் ஒன்றை வைத்து எண்ணெய் தடவி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை தோசை கல்லில் வட்டமாக ஊற்றி கொள்ளவும்.
ஊற்றிய தோசையின் மேல் எண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறினால் சுவையான ரவா தோசை ரெடி..