மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் சக்திகாந்த தாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வங்கிக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல், 6.5 சதவிகிதம் என்ற அளவிலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சர்வதேச அளவில் பல பாதிப்புகள் இருந்தாலும், இந்தியாவில் பண வீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்தார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் 6.5% ஆக உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டி விகிதம், கடந்த ஓராண்டாக அதே அளவில் நீடிப்பது, ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்கியுள்ளதாக வீடு விற்பனை நிறுவனங்கள் கருதுகின்றன.
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஒரே அளவிலேயே நீடிப்பதால், வங்கிக் கடனில் வீடு வாங்கிய நடுத்தர மக்களும் தற்காலிக ஆறுதல் அடைந்துள்ளனர்.