தேவையான பொருட்கள் :
தயிர் – 200 கிராம்
வெண்டைக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கசூரி மேத்தி – 2 ஸ்பூன்
கொத்துமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 2.1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வெண்டைக்காயை நன்றாக அலசி சற்று நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சுவைக்கேற்ப உப்பு, கசூரி மேத்தி மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
அடுத்து அதில் ஏற்கனவே கடைந்து வைத்துள்ள தயிர் மற்றும் தண்ணீரை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவேண்டும்.
பிறகு அதில் வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
மோர் குழம்பு நன்றாக கொதிவந்தவுடன் கடைசியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கினால் ‘வெண்டைக்காய் மோர் குழம்பு’ தயார்.