மாசுபாடு, பருவநிலை மாற்றம், அதிகப்படியாக சூரிய ஒளி படருதல் போன்ற காரணங்களால் உங்கள் சருமம் பாதிப்பு அடையக் கூடும். அதிலும் உணர்ச்சி மிகுந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் என்றால் உங்களுக்கான பாதிப்பு மிகுதியாக இருக்கலாம். இன்றைக்கு பெரும்பாலான மக்கள், அதிக உணர்ச்சி கொண்ட சருமத்தில் பல்வேறு விதமான இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், சுமார் 75 சதவீத மக்கள் தங்களுடைய சருமம் மிகுந்த உணர்ச்சி கொண்டதாக இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். மேலும் ஓரளவுக்கு உணர்ச்சி மிகுந்ததாகவும், வறட்சி கொண்டதாகவும் இருக்கிறது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற சரும பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரக் கூடிய பொருட்களில் ஒன்று ஓட்ஸ் ஆகும்.
இயற்கையான பொருள் :
ஓட்ஸ் நமது காலைநேர பசியை போக்குவது மட்டுமல்ல, நம்முடைய சருமத்திற்கும் எண்ணற்ற பலன்களை தரக் கூடியது ஆகும். நீண்ட காலமாக இதன் மருத்துவப் பலன்கள் குறித்து ஆய்வு ரீதியிலான முடிவுகள் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதை வெகுமக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
பொதுவாக இயற்கையான உப பொருட்கள் கொண்ட அழகுசாதன பொருட்களில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள், நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் அதிகம் இருக்கும். அந்த வகையில் இயற்கையான ஓட்ஸ் நம் சருமத்திற்கு சிறந்த தேர்வு ஆகும். ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களைக் காட்டிலும் இதுபோன்ற பொருட்களை தான் மருத்துவர்கள் அதிகம் பரிந்துரை செய்கின்றனர்.
நாம் பயன்படுத்தக் கூடிய சோப், லோஷன், மேக்கப் பொருள் போன்றவற்றின் மூலமாக நமக்கு உடனடியாகவோ, நீண்ட நாள் பயன்பாடு அடிப்படையிலோ அலர்ஜி ஏற்படக் கூடும். ஆனால், ஓட்ஸ் தரும் பாதுகாப்பு அலாதியானது மற்றும் இதுபோன்ற அலர்ஜிகளில் இருந்து விலக்கு கொண்டது ஆகும்.
சவால்கள் :
உங்கள் சருமம் உணர்ச்சி மிகுந்ததா, எந்தப் பொருள் பயன்படுத்தினாலும் அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியதா என்பதைக் கண்டறிவதே மிகுந்த சவாலான காரியம் ஆகும். பெரும்பாலான மக்கள் தங்கள் 30 வயதுக்கு முன்பாக இந்தப் பிரச்சனையை அறிந்து கொள்கின்றனர். பருவநிலை அடிக்கடி மாற்றம் அடையக் கூடிய இந்தியா போன்ற நாடுகளில் சருமம் மிகுந்த உணர்ச்சி கொண்டதாக இருக்கும். அதிகமான வெயில் காரணமாக நம் சருமம் மெலிந்து காணப்படும். இதனால் பாதிப்புகள் எளிதில் உண்டாகலாம். அதேபோல குளிர்காலத்திலும் இருக்கம், அரிப்பு போன்ற பிரச்சனைகள் சருமத்தில் உண்டாகலாம்.
பயன்பாடு :
ஓட்ஸ்களை எடுத்து பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். இது உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்து கிடைக்க உதவும் மற்றும் வறட்சி, அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.