ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான கொண்டாட்டங்கள் அந்த வாரம் முழுவதும் இருக்கும். அந்த வகையில், முதல் நாள் ரோஜா தினத்தில் தொடங்கி, மூன்றாம் நாள் சாக்லெட் தினம் கொண்டாடப்படுகிறது.
சாக்லேட் தினம் ஏன் :
சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டுமல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும்போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். ஆக, இந்த நாளை நீங்கள் தவறவிட வேண்டாம். உங்கள் மனைவி அல்லது பெண் தோழி அல்லது நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்விக்கலாம்.
சாக்லேட் டே முக்கியத்துவம் : சாக்லேட் முதன்முதலில் 1550ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் ஆனது. இதையொட்டி உலக சாக்லேட் தினம் ஆண்டுதோறும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் அன்பை வெளிபடுத்து விதமாக காதலர் தின கொண்டாட்ட வாரத்தில் மூன்றாம் நாள் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
சாக்லேட்டின் பலன்கள் :
காதலர் தினத்திற்கான கொண்டாட்டம் என்பதைத் தாண்டி சாக்லேட் சாப்பிடுவதால் பல வகையில் நன்மை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு சாக்லேட் சாப்பிட்டால் நம் சருமம் பளபளப்பாக மின்னும். சாக்லேட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பிளேவனாய்ட்ஸ் என்ற சத்து நம் உடலுக்கு ரிலாக்ஸ் அளிக்கக் கூடியதாகும்.
டார்க் சாக்லேட் சாப்பிடலாம் :
மற்ற சாக்லேட் காட்டிலும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மிகுதியான நன்மை உண்டு. இது நம் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகளை குறைக்கும். டார்க் சாக்லேட்டில் உள்ள பிளேவனாய்ட்ஸ் நமக்கு சர்க்கரை அளவை மிகுதியாக அதிகரித்துவிடாது. ஆகவே சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சமின்றி இதை சாப்பிடலாம். சாக்லேட் தினத்திற்கு அடுத்த நாள் டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெடி பியர் மற்றும் இதர பொம்மைகளை பரிசாக வழங்கி மகிழலாம்.