95
இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் நான் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த வேளை இந்த சட்டம் கருத்து சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கரிசனையை தெரிவித்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.