104
மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசினால் கடந்த 1 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் கேரள எம்பிக்கள் மட்டுமல்லாது, தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்களும் கறுப்புடை அணிந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.