இன்றைய காலகட்டத்தில் மாறிப்போன உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. அதிகப்படியான நொறுக்கு தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்ட உணவுகள், குளிர் பானங்கள் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு மகிழ்கிறோம். ஆனால் அவற்றால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை பற்றி யோசிக்க மறந்து விடுகிறோம். அந்த வகையில் தற்போது அடிக்கடி நமது உணவில் சேர்த்து வரும் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரீமையான அமைப்பு முதல் ஆரோக்கியமான சாலடுகள் வரை பல்வேறு விதமான தின்பண்டங்கள் மற்றும் உணவுகளில் தற்போது மயோனைஸ் சேர்க்கப்படுகிறது. மயோனைஸ் என்பது கிட்டத்தட்ட அன்றாட டயட்டில் ஒரு அத்தியாவசிய பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால் இது சத்தம் இல்லாமல் நம் உடலில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. உடல் எடை அதிகரிப்பு முதல் பல்வேறு உடல்நல கோளாறுகள் வரை தினமும் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படுகின்றன. நீங்கள் நினைப்பது போல் மயோனைஸ் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்பதை நிரூபிக்க கூடிய ஒரு சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு :
மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய், சோடியம் நிறைந்த உப்பு போன்றவை கொண்டு செய்யப்பட்ட அதிக கலோரி மிகுந்த ஒரு உணவு பொருள். இதன் காரணமாக இதில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. சாண்ட்விச், சாலட் மற்றும் பிற உணவுகளில் இதனை அடிக்கடி நாம் சாப்பிடும் பொழுது நமது கலோரி உட்கொள்ளல் அதிகரிக்கிறது.
சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட் அளவு வழக்கமான மயோனைஸ் பெரும்பாலும் காய்கறி எண்ணெய்களால் செய்யப்படுகிறது. அதில் சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட்டுகள் அடங்கியிருக்கின்றன மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது இதய நோய்களுடன் தொடர்புள்ள அபாயங்களை ஏற்படுத்தும்.
பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் அடிட்டிவ்கள் :
கமர்ஷியலாக தயாரிக்கப்படும் மையோனைசில் பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் அடிட்டிவ்கள் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக அதன் ஆயுட்காலம் மற்றும் சுவை மேம்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்படும் மையோனைஸில் பெரும்பாலும் பச்சை முட்டை சேர்க்கப்படுகிறது. இதன் விளைவாக சால்மோனெல்லாவால் ஏற்படக்கூடிய ஃபுட் பாய்சன் உண்டாகலாம் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கமர்ஷியலாக தயாரிக்கப்படும் மையோனைசில் பாஸ்சுரைஸ் செய்யப்பட்ட முட்டைகள் சேர்க்கப்படுகின்றன. இது கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் போன்றவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அலர்ஜி :
குறிப்பிட்ட உணவு தேர்வுகள் மற்றும் அலர்ஜிகளால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் மயோனைஸ் சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மயோனைஸில் உள்ள முட்டை காரணமாக அது ஒரு சில நபர்களில் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.