நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார். இதையடுத்து சம்பாய் சோரன் ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.இந்த சூழலில் கடந்த 2ஆம் தேதி ஜார்கண்ட் மாநில முதல்வராக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. 47 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபித்தார்.