மேஷம்:
காதல் உறவை ஏற்பது குறித்து திடமான முடிவு எடுக்க முடியாத சூழலில் நீங்கள் உள்ளீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக உரையாடுவதும், அவர்கள் பேசுவதை ஆழமாக பரிசீலனை செய்து முடிவு எடுப்பதும் அவசியமாகும். கடும் பணி சூழலுக்கு இடையே நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்:
உங்கள் மனம் சொல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் காதலுக்குரிய நபருடன் மிகுந்த நெருக்கம் உண்டாகும். பொருளாதார ரீதியாக நீங்கள் வெற்றியடைவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் அல்லது நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெறுவீர்கள். செலவுகளை செய்வதில் கவனம் தேவை.
மிதுனம்:
பிறரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சிறப்பு கூறிய விஷயங்களை காட்டிலும் இயல்பான விவகாரங்களில் கவனம் செலுத்துவீர்கள். சமீபத்தில் சந்தித்த நபருடன் ஆழமான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள மறந்திருப்பீர்கள். பொருளாதார வெற்றி உங்களை நெருங்கி வருகிறது. குறுகிய கால முதலீடுகளை செய்ய வேண்டாம். பயணங்கள் மன அமைதியை தரும்.
கடகம்:
உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களிடமிருந்து விலகி வருவதைப் போல உணர்வீர்கள். உறவுகளை தக்கவைக்க மன்னிக்கும் குணத்தை வளர்த்துக் கொள்ளவும். தோராயமான முதலீடுகளை செய்யும்போதும், முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களை ஒத்திவைக்க நேரிடும். உங்கள் உடல் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்:
உங்கள் காதல் வாழ்க்கை இன்று புதிய தொடக்கத்துடன் அமையும். உங்கள் மதிப்புகளுடன் ஒத்துப் போகின்ற புதிய நபர்களை சந்திப்பீர்கள். உங்கள் பணி வாழ்க்கையில் பொருளாதார பாதுகாப்பு ஏற்பட இருக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கான பலன்களை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
கன்னி:
காதல் உறவுகளில் இடையூறு ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வு காண முயற்சித்து வருவீர்கள். உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நீங்கள் பாதிக்கப்பட்டவராக உணர்ந்தாலும் உங்களுடைய வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டும். ஏற்கனவே ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை முடித்துக் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்:
உங்கள் ஆழ்மனம் சொல்லும் விஷயங்களை நீங்கள் நம்பிக்கை வைப்பீர்கள். பணி சார்ந்த வாழ்க்கையில் தடைகள் அல்லது சவால்களை நீங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் உங்கள் தைரியத்தின் மூலமாக அதை நீங்கள் எதிர்கொண்டு வருவீர்கள். பயணத்தின் மூலமாக வாழ்க்கையின் அடுத்த கட்ட கதவு திறக்கும்.
விருச்சிகம்:
புதிய காதல் அனுபவம் உண்டாகும். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள் அந்த உறவை வளமானதாக அமைத்துக் கொள்வீர்கள். பணி சார்ந்த வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள் மற்றும் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும்.
தனுசு:
காதல் உறவுகளில் நடக்கும் தவறுகளை நீங்கள் மன்னிக்க வேண்டும். இதனால் எதிர்மறையான சிந்தனை மறைந்து உங்கள் உறவுகள் பலப்படும். நீங்கள் நினைத்த காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் இலக்கு குறித்து தெளிவாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த உடல் நலன் குறித்து அக்கறை செலுத்துவது அவசியம்.
மகரம்:
புதிய காதல் வாழ்க்கையில் நீங்கள் அடி எடுத்து வைக்க உள்ளீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடனான உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பயணங்களின் மூலமாக வளர்ச்சியை அடைவீர்கள். ஆன்மீக வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கும்பம்:
உங்கள் காதல் உறவில் மாற்றம் ஏற்படும். இருப்பினும் அது எதிர்கால வாழ்வை பலப்படுத்துவதாக அமையும். எந்த ஒரு விஷயத்திலும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டாம். பணியிடத்தில் உங்களுக்கான வெற்றி கிடைக்கும் அல்லது புதிய வாய்ப்புகளை தேடிச் செல்வீர்கள். உங்களைப் பற்றி நேர்மையான சிந்தனையை கட்டமைக்க முயற்சி செய்வீர்கள்.
மீனம்:
உங்கள் பணி சார்ந்த வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும். மாபெரும் சாதனைகளை நீங்கள் செய்ய உள்ளீர்கள். உங்கள் உடல் நலன் பாதிக்கப்படலாம். இருப்பினும் ஆன்மீக நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக மன அமைதி பெறலாம். பயணங்களின் மூலமாக மாற்றம் உண்டாகும்.