மட்டன் சுக்கா

by Editor News

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 150 கிராம்

எண்ணெய் – 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மட்டன் வேகவைக்க தேவையானவை :

மட்டன் – 500 கிராம் (பெரும்பாலும் எலும்பு இல்லாதது)

எண்ணெய் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 200 மிலி

மசாலா பொடி செய்ய தேவையானவை :

கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி

கருப்பு மிளகுத்தூள் – 1.5-2 தேக்கரண்டி (தேவையென்றால்)

சீரகம் – 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் – 3/4 தேக்கரண்டி

காய்ந்த சிவப்பு மிளகாய் – 2

கிராம்பு – 3

இலவங்கப்பட்டை – 2

பச்சை ஏலக்காய் – 2

செய்முறை :

முதலில் ஒரு பிரஷர் குக்கரை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் அலசி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

மட்டன் மென்மையாகும் வரை 4 விசில் விட்டு வேகவிடவும்.

குறிப்பு : பிரஷர் குக்கருக்கு பதில் பாத்திரத்தில் சமைக்கிறீர்கள் என்றால் அனைத்து பொருட்களையும் சேர்த்து மூடி வைத்து மட்டன் மென்மையாகும் வரை சுமார் 45 நிமிடங்கள் சமைக்கவும்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து மசாலா தூள் செய்ய குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும்.

வறுத்து எடுத்துள்ள அனைத்து மசாலா பொருட்களையும் நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.

மசாலா பொருட்கள் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை கொரகொரவென்று தூளாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது மட்டன் சுக்கா செய்ய கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாதியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் 1-2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பிறகு அதில் கீறிவைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு பொன்னிறமாக வதங்கும் வரை ஒரு 5 – 6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

பிறகு ஏற்கனவே வேகவைத்த மட்டனை தண்ணீருடன் அப்படியே இதில் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

இது ஒரு கொதி வந்தவுடன் முன்பே அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி கறி நன்றாக வறுக்கப்பட்டு நிறமாக மாறும் வரை இதை 6-7 நிமிடங்களுக்கு அதிகமான தீயில் வறுக்கவும்.

மட்டன் நன்றாக வறுபட்டவுடன் சுவைப்பார்த்து தேவையென்றால் உப்பு சேர்த்து கொள்ளவும்.

பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை அதிக தீயில் 1-2 நிமிடங்களுக்கு வறுத்து இறக்கினால் சுவையான ‘மட்டன் சுக்கா’ ரெடி…

Related Posts

Leave a Comment