மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்..

by Editor News

ரக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். ரா.கோ. யோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரக்சன் உடன் இணைந்து மெலினா, தீனா, ராகுல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

பள்ளி பருவத்தில் கதாநாயகன் ரக்‌ஷன், கதாநாயகி பிரியதர்ஷினியை ஒருதலையாக காதலித்து வருகிறார். தனது காதலை இப்போ சொல்லவிடுவேன், நாளை சொல்லிவிடுவேன் என பள்ளி முடியும் வரை தனது காதலை பிரியதர்ஷினி இடம் சொல்லாமலே போய் விடுகிறார் ரக்‌ஷன்.

2008ல் இவர்களுடைய பள்ளி வாழ்க்கை முடிவு வந்த நிலையில், மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து அனைவரும் அதே பள்ளியில் முக்கிய காரணத்திற்காக ரியூனியன் ஆகிறார்கள். அப்போதாவது தனது காதலை பிரியதர்ஷினி இடம் ரக்‌ஷன் கூறினாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

எடுத்துக்கொண்ட கதைக்களம் நம் மனதை தொடுவது போல் இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லாத காரணத்தினால் மறக்குமா நெஞ்சம் படம் கொஞ்சம் கூட நம் மனதை தொடவில்லை.

ஒரு இடத்தில் கூட நம்மை ரசிக்க வைக்க தவறிவிட்டார் இயக்குனர். 90ஸ் கிட்ஸ் நினைவுகளை திரையில் காட்டினாலும், அதை சுவாரஸ்யமாக காட்டவில்லை. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

மேலும் கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஹீரோ, ஹீரோயின், அவர்களுடன் இருந்தவர்கள் யாருமே பள்ளி மாணவர்கள் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. ஹீரோவாக நடித்த ரக்ஷன் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் தேவை.

நகைச்சுவை ஒரு இடத்தில் கூட எடுபடவில்லை. ஆனால், நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை குறித்தும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து இயக்குனர் காட்டிய விஷயம் நன்றாக இருந்தது. பின்னணி இசை, பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவு, எடிட்டிங் பெரிதளவில் இல்லை.

பிளஸ் பாயிண்ட்

கதைக்களம்

மைனஸ் பாயிண்ட்

கதாபாத்திரங்கள் தேர்வு

திரைக்கதை

எடிட்டிங்

மொத்தத்தில் மறக்குமா நெஞ்சம் மறக்கவே மறக்காது..

Related Posts

Leave a Comment