121
தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யேவர் பிரானென் றிறைஞ்சுவர் ரவ்வழி
யாவர் பிரானடி யண்ணலு மாமே.
விளக்கம்:
தேவர்களுக்கெல்லாம் தலைவன், பத்து திசைகளையும் தனது திருமுகங்களாக கொண்ட தலைவன் பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன் ஆகிய நான்கு தெய்வங்களுக்கும் தலைவன், அருவமாகிய மேலுக்கும் உருவமாகிய கீழுக்கும் நடுவில் வீற்றிருக்கின்ற குருநாதனாகிய இறைவன், எவருக்கும் தலைவன் என்றெல்லாம் போற்றி வழிபடுகின்ற அடியவர்களின் நெறி முறையை பின்பற்றி தாமும் அப்படியே வழிபடுகின்ற அடியவர்களது தலைவனாகவும், தமது திருவடியை அருளி அடியவர்க்கும் அடியவனாகவும், அவர்களை காத்து அருளுபவனாக ஞான இலிங்க வடிவான இறைவன் இருக்கின்றான்.