ஆபரண தங்கத்தின் விலை ரூ. 47 ஆயிரத்தை தாண்டியது!!

by Editor News

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு, கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ . 80 குறைந்தது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ. 5,850க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,800க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,880க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.47,040க்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment