ரசம் பொடி ரெசிபி..

by Editor News

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்

மல்லி விதைகள் – 1/2 கப்

வரமிளகாய் – 10

புளி – 100 கிராம்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1/2 கப்

மிளகு – 1/2 கப்

பெருங்காயம் – பெரிய கட்டி ஒன்று

கல் உப்பு – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் துவரம் பருப்பு, மல்லி விதை, வரமிளகாய், மிளகு, சீரகம், பெருங்காயம், புளி மற்றும் கல் உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பு : பெருங்காயம் கட்டியாக இருந்தால் அதை பொடித்து பின் வறுத்துக்கொள்ளுங்கள் அல்லது தூள் பெருங்காயம் என்றால் அதை நேரடியாகவே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வறுத்து எடுத்து வைத்துள்ள அனைத்தும் நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பு : மிக்ஸி ஜாரில் புளி அவ்வளவு எளிதாக மசியாது எனவே அரைக்கும் பொடியை மீண்டும் மீண்டும் சலித்து அனைத்தும் முழுமையாக பொடியாகும் வரை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்

இறுதியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை வறுத்து பொடியுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கறிவேப்பிலையை சேர்க்கும் முன் அதை கைகளால் பொடித்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் எளிதாக ரசம் செய்ய பொடி ரெடி…

இந்த ரச பொடியை இறுக்கமான கண்ணாடி பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து காற்று புகாமல் இறுக்கமாக மூடி ஒரு மாதம் வரை நீங்கள் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment