நடிகர் சிம்புவுக்கு இந்த நடிகை உடன் திருமணம்..

by Editor News

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான சிலம்பரசன் 2002-ம் ஆண்டில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பின்னர் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்த சிம்பு, பின்னர் பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனினும் தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருக்கிறர். இதனால் இவர் திருமணம் குறித்து அவ்வபோது சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரை சிம்பு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

முன்னதாக சிம்பு நயன்தாராவும் காதலித்து வந்தானர். ஆனால் இருவரும் பின்னர் பிரேக் அப் செய்துவிட்டனர். பின்னர் நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் ஹன்சிகாவும் பிரேக் அப் செய்து விட்டார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும் சிம்புவும் காதலித்து வருகின்றனர் எனவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று வேகமாக தகவல் பரவியது. எனினும் அது வெறும் வதந்தியாகவே இருந்தது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டி. ராஜேந்தேருக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுவதால் விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவர் நினைக்கிறாராம். இதற்காக சிம்புக்கு தீவிரமாக பெண் தேடி வருகிறாராம்.

மேலும் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி மகளை சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்கவும் டி. ராஜேந்திர முடிவு செய்துள்ளாராம். அவர் வேறு யாருமில்லை நடிகை வரலட்சுமி தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடியாக ராதிகா – சரத்குமார் தம்பதி இருக்கின்றனர். சரத்குமாரின் மூத்த மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும், வில்லி கேரக்டரிலும் வரலட்சுமி நடித்து வருகிறார். இவரும் விஷாலும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரேக் அப் செய்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சிம்புவும் வரலட்சுமியும் திருமண செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment