104
தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கேற்கவுள்ளதுடன் டெல்லியின் அனைத்து எல்லைகளும் முடப்பட்டு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகிறது.
மேலும் தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன் இதில் இராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் அதிநவீன ஏவுகணைகள், போர்க்கப்பல்களின் மாதிரிகள், கவச வாகனங்கள், உள்ளிட்டவை அணிவகுப்பில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.