இந்த நவீன யுகத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு உட்பட பல காரணங்கள் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் கருவுறுதலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். அதன்படி ஆண்களின் விந்துணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் சில உணவுகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அட்வான்சஸ் இன் நியூட்ரிஷன் (Advances in Nutrition),இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வில், மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடுவது விந்தணுக்களின் தரத்தை கணிசமாக மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவுமுறை மற்றும் உணவுத் துறையின் ஆராய்ச்சியாளரும், ஆய்வின் முதல் ஆசிரியருமான பார்பரா கார்டோசோ இதுகுறித்து பேசிய போது “உலகளவில், இனப்பெருக்க வயதுடைய 6 பேரில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கருத்தரிக்க முடியாமல் இருப்பவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள பல சிகிச்சைகள் இருந்தாலும் அவை மிகவும் விலை உயர்ந்தவை என்பதால் அனைவருக்கும் கிடைக்காது.
முந்தைய ஆய்வுகள் அதிக விந்து எண்ணிக்கைக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பது பலனளிக்கும் என்று கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது மற்ற உணவுகளும் . ஆரோக்கியமான விந்தணுக்களின் உற்பத்தியை ஆதரிக்க உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, நட்ஸ் விந்தணுக்கு எண்ணிக்கைக்கு உதவக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் ” பல வகையான நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. இந்த சத்துக்கள் அனைத்தும் ஆண்களின் கருவுறுதலுக்கு பல்வேறு பாத்திரங்களில் பங்களிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
குறிப்பாக வால்நட்கள் விந்தணு தரத்துடன் தொடர்புடையவை, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் ராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பல ஆய்வுகள் ஒமேகா-3களை இணைத்துள்ளன. விஞ்ஞானிகளால் முன்வைக்கப்படும் ஒரு விளக்கம் என்னவென்றால், இந்த கொழுப்பு அமிலங்கள் விந்தணு சவ்வின் திரவத்தன்மையை ஆதரிக்கவும் மற்றும் முட்டை உயிரணுவுடன் இணைவதை ஊக்குவிக்கவும் உதவும்.
ஒமேகா-3 அமிலங்கள் மீன்களிலும் அதிக அளவில் உள்ளது. எனவே நட்ஸ் ஒவ்வாமை உள்ள எவருக்கும் மீன்களை சாப்பிடுவதன் மூலம் விந்தணுவின் தரத்தை மேம்படுத்த முடியும். ” என்று தெரிவித்தார்.
மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 18 மற்றும் 35 வயதிற்குட்பட்ட 223 ஆரோக்கியமான ஆண்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கையளவு நட்ஸ் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் நட்ஸ் சாப்பிட்ட ஆண்களின் விந்தணு தரம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த ஆய்வில் பங்கேற்ற ஆண்கள், மேற்கத்திய பாணி உணவை உட்கொண்டனர், இது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது வழக்கமான உணவில் நட்ஸ் சேர்ப்பதால் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது.
எனினும் பெண்களிலும் இதே போன்ற முடிவுகள் காணப்படுமா என்பது இந்த ஆய்வில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. பெண் கருவுறுதலில் நட்ஸின் விளைவுகளை எந்த ஆய்வும் மதிப்பிடவில்லை, மேலும், பல்வேறு வகையான கொட்டைகள் வெவ்வேறு ஊட்டச்சத்து சுயவிவரத்துடன் இருப்பதால், இதுகுறித்து மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.