இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனிடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று முதல் வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கிங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. தற்போது வரை இங்கிலாந்து அணி 26 ஓவர்கள் முடிவில், 100 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது. இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டும், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.