தேவையான பொருட்கள் :
மட்டன் – 250 கிராம்
உருளைக்கிழங்கு – 1/2
பச்சை பட்டாணி – தேவைக்கேற்ப
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப
சீரக தூள் – 1/4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
பெருஞ்சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
கெட்ச்அப்
பிரட்தூள்
முட்டை
தண்ணீர்
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின்பு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பெருஞ்சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மட்டனைச் சேர்த்துக் கட்டிகள் இன்றி நன்கு கிளறி சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
மட்டன் பழுப்பு நிறமாக மாறும் வரை 10 நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைக்கவும்.
மட்டன் பழுப்பு நிறமாக மாறியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு பச்சை பட்டாணி சேர்த்து அதனுடன் கெட்ச்அப் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
உருளைக்கிழங்கு மசாலாவுடன் நன்கு மிக்ஸ் ஆகும் வரை 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கி அவற்றை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவைக்கவும்.
இந்த மட்டன் கலவை சிறிது ஈரமான பதத்தில் இருந்தால் அதை சரிசெய்ய அதில் 1-2 டீஸ்பூன் பிரட்தூள் சேர்த்து கலந்து கெட்டியாக மாற்றிக்கொள்ளவும்.
கட்லெட் செய்ய தேவையான அளவு மட்டன் கலவையை எடுத்து சிறிய உருண்டையாக உருட்டி அவற்றை வட்ட வடிவமாக வடிவமைக்கலாம் அல்லது சிறிது நீளமாக வடிவமைக்கலாம்.இப்போது ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை எடுத்து அடித்து தனியாக வைக்கவும்.
ஒரு அகலமான தட்டில் பிரட்தூள்களை பரப்பி வைத்துக்கொள்ளவும்.
தற்போது ரெடி செய்து வைத்துள்ள கட்லெட்டை முதலில் முட்டையில் நனைத்து, பின்னர் பிரட்தூள்களில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பு :
பிரட்தூள்கள் கட்லெட்டில் ஒட்டிக்கொள்ள முட்டை உதவுகிறது. பிரட்தூள்களில் பிரட்டும்பொது கட்லெட்டை மெதுவாக அழுத்தவும்.
இப்போது ரெடி செய்து வைத்துள்ள கட்லெட்டை ஒரு தட்டில் வைத்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும். இதனால் பிரட்தூள்கள் கட்லெட்டில் ஒட்டிக்கொள்ளும்.
தற்போது குளிர்சாதன பெட்டியில் இருந்து கட்லெட்டை வெளியே எடுத்து சில நிமிடங்களுக்கு வெளியில் வைத்து ஈரப்பதம் போகும்வரை காத்திருக்கவும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் தீயை குறைத்து கட்லெட்டுகளை கவனமாக போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
கட்லெட் ஒருபுறம் வெந்து பொன்னிறமாக மாறியவுடன் அவற்றை மெதுவாக புரட்டி மறுபுறம் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
கட்லெட் நன்கு வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து எண்ணெய்யை வடிக்கட்டி தட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.
குறிப்பு : கட்லெட்டில் பயன்படுத்திய அனைத்தும் ஏற்கனவே சமைக்கப்பட்டது என்பதால் கட்லெட் வறுக்க அதிக நேரம் எடுக்காது 1 முதல் 2 நிமிடங்களே போதும்.
தற்போது தயாரான மட்டன் கட்லெட்டை சூடாக கெட்ச்அப் உடன் சேர்த்து பரிமாறி மகிழுங்கள்…