குளிர் காலத்தில் கைக்குழந்தைகளை கவனித்துகொள்ளுவது எப்படி..

by Editor News

குளிர்கால மாதங்கள் முழுவதும் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகள் முதல் வீட்டிற்குள் நிலவும் வெப்பநிலை வரை அனைத்தையும் நாம் கருத்தில் கொள்வது வளர்ந்து வரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

புதிதாக பிறந்த குழந்தைகளை குளிர்காலத்தில் எப்படி பராமரித்துக் கொள்வது என்பதற்கான சில முக்கியமான குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. குளிர் காலத்திற்கு ஏற்ற ஆடைகள் : குழந்தைகளுக்கு நீங்கள் எத்தனை ஆடைகளை ஒன்றின் மேல் ஒன்று அணிவித்தாலும் அவர்களுக்கு அது கதகதப்பாக இருக்காது. மாறாக நீங்கள் குளிர் காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். இயற்கையான அதே சமயம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நூல்களால் ஆன நன்கு சுவாசிக்க கூடிய, மென்மையான ஆடைகளை அவர்களுக்கு அணிவிக்கவும். குழந்தைகளின் கைகள், கால்கள் மற்றும் தலையை கம்பளி துணிகள் கொண்டு நீங்கள் மூடலாம். சாக்ஸ், தொப்பி போன்றவற்றை குழந்தைகளுக்கு அணிவித்து அவர்களை கதகதப்பாக வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் டயபர் ஈரமாகி விட்டால் உடனடியாக அவற்றை மாற்றி விடவும். இல்லையெனில் அதனால் குழந்தைக்கு சளி பிடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

2. அத்தியாவசிய எண்ணெய்கள் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யவும் : பாதாம், தேங்காய், எள் போன்ற பொருட்களால் ஆன வெதுவெதுப்பான எண்ணெயுடன் குழந்தைகளை மசாஜ் செய்வது குழந்தைகளின் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கான வலிமையான எலும்புகளை தருவதற்கு உதவும். மசாஜ் செய்த பிறகு 1 முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்து குழந்தையை நன்கு குளிக்க வைக்கவும். ஆயில் மசாஜ் குழந்தையின் உடலை கதகதப்பாக வைத்து, குழந்தை நிம்மதியாக தூங்குவதற்கு உதவும்.

3. ஆரோக்கிய உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தையை தாயின் தோலோடு தோல் தொடர்பு கொள்வதற்கு உதவுவதால், குழந்தை கதகதப்பாக உணரும். அதோடு தாய்ப்பால் மூலமாக குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அவசியமான ஆன்டிபாடிகள் கிடைக்கும். ஆறு மாதங்களுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்கலாம்.

4. உடல்நல குறைவுக்கான அறிகுறிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்: எவ்வளவுதான் நீங்கள் கவனமாக குழந்தைகளை பார்த்துக் கொண்டாலும் அவர்களுக்கு சளி, தொற்றுகள், மூச்சு திணறல், காய்ச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எப்பொழுதுமே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து உடல் நல குறைவு சம்பந்தப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். அறிகுறிகள் தீவிரமாகும் வரை காத்திருக்க வேண்டாம். குழந்தைக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துங்கள்.

5. உங்களையும் உங்கள் சுற்றுசூழலையும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கவும்: ஒருவேளை நீங்கள் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய தாயாக இருந்தால் நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். குளிர்காலத்தில் வெப்பநிலை 3 முதல் 4 டிகிரிகள் குறைவாக இருப்பதால் வீட்டில் ரூம் ஹீட்டர்களை பயன்படுத்தி வெப்பநிலையை சீராக வைக்கலாம். ஆனால் ஹியூமிடிஃபையர்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து விடலாம் என்பதால் சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமங்கள் ஏற்படலாம். எனவே நீங்கள் ஹியூமிடிஃபையருடன் சேர்த்து ரூம் ஹீட்டர்களையும் பயன்படுத்த வேண்டும்.

Related Posts

Leave a Comment