”தங்கள் நாட்டின் மீது பாக்கிஸ்தான் அரசு நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு” ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் மீது ஈரான் நடத்திய வான்வெளித்தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்ததோடு மூவர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் விமானப்படை ஈரானில் உள்ள 7 இடங்களில் வான்வெளித்தாக்குதல் நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ” இரு நாடுகளின் எல்லையில் உள்ள ஈரானியர் அல்லாத கிராமவாசிகள் மீது பாகிஸ்தான் அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர், மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல மாட்டார் எனவும், இத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசு உடனடியாகப் பதில் அளிக்கவேண்டும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.