பொதுவாக பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வாழைப்பூவில் நிறைவாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே நம் உடல் நலனுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பவை. அதுபோக வாழைப்பூவை சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் பிரச்னை மற்றும் யூரிக் அமில பிரச்னையை தீர்க்க உதவும் என்று குறிப்பிடுகின்றனர். பிற பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
கரையத்தக்க நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகிய இரண்டு வகை நார்ச்சத்துக்கள் இதில் உண்டு. இவை நம் மெடபாலிச நடவடிக்கையை ஊக்குவிப்பவை. அதேபோல செரிமான சக்தியை மேம்படுத்தும். தேவையற்ற கழிவுகளை மலம் வழியாக வெளியேற்றும்.
பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி குறையும் மற்றும் எலும்புகளின் அடர்த்தி மேம்படும்.
எலும்புகளுக்கு மத்தியில் சிதைவு ஏற்பட்டால் அதில் யூரிக் அமிலம் தங்கும். அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட வாழைப்பூ சாப்பிட்டால் இதில் இருந்து தீர்வு கிடைக்கும் மற்றும் வலி இருக்காது.
வாழைப்பூ பொரியல் செய்யும் முறை:
வாழைப்பூவில் உள்ள வெள்ளை நிற வெளிப்புறத் தோல் மற்றும் நரம்புகளை நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை தண்ணீரில் வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாயில் 50 மில்லி அளவுக்கு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொறிக்கவும்.
பிறகு வர மிளகாய் 5, 6 துண்டுகளை எண்ணெயில் வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.