சிக்கன் உப்பு கறி ரெசிபி…

by Editor News

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 20
வரமிளகாய் – 25
பூண்டு – 10
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
கருவேப்பிள்ள
நல்லெண்ணெய்
மிளகுத்தூள்
உப்பு
மிளகாய்த்தூள்
சோம்பு

செய்முறை:

இதனை செய்வதற்கு முதலில், சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, சுமார் கால்மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதன்பின்னர், ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சோம்பு வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றுடன் 10 பல் பூண்டையும் சேர்க்க வேண்டும். பின்பு சிக்கனை சேர்க்க வேண்டும்.

சிக்கன் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் மிளகு பொடி சேர்க்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுவையான சிக்கன் உப்பு கறி ரெடி.

Related Posts

Leave a Comment