பாகற்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..

by Editor News

உடலுக்கு நன்மைகளை செய்யும் பல உணவுகளை காய்கறிகளாக, பழங்களாக நாம் எடுத்துக்கொள்ளும் வேளையில், அதில் இருக்கும் நன்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

பாகற்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடப்பது நமக்கு நன்கு தெரிந்த ஒன்று. 2 கரண்டி பாகற்காய் சாறுடன் நீர் சேர்த்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை பிரச்சனை சரியாகும்.

பாகற்காயில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால் நோயெதிர்ப்பு சக்தி, காயங்களை சரிசெய்யும் திறன் போன்றவை இயற்கையாக நமது உடலுக்கு கிடைக்கும்.

அவ்வப்போது பாகற்காயை உணவில் சேர்ப்பதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் போன்ற நோய்கள் சரியாகும். பாகற்காயின் விதைகளும் கிருமி நாசினியாக செயல்படும். கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும்.

Related Posts

Leave a Comment