பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு!!

by Editor News

பொன்முடி மற்றும் அவரது மனைவியாகிய இருவரும் சரணடைவதில் இருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்தார். வரும் 22ஆம் தேதி வரை விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய பொன்முடி, அவரின் மனைவிக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணையில் சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment