63
யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை குறிவைத்து பல நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளன.
குறித்த தாக்குதல் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளபப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா மற்றும் நெதர்லாந்தின் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அண்மைக்காலமாக செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களை நடத்தி வரும் பின்னனியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.