இன்றைய ராசி பலன்(12-01-24)

by Editor News

மேஷம்

உங்கள் காதல் வாழ்க்கையில் குதூகலம் மற்றும் நல்லிணக்கம் நிரம்பியிருக்கும். உங்கள் காதல் பந்தம் நேர்மறையான திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் பணி சார்ந்த வளர்ச்சி மற்றும் மேம்பாடு காணப்படும்.

ரிஷபம்

உங்கள் அன்புக்குரிய நபர்களுடன் உளப்பூர்வமான பந்தம் மேம்பட இருக்கிறது. நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்யும்போதும், செலவுகளை செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

உங்கள் காதல் பந்தத்தில் உரையாடல் தான் மிக அவசியம். நீங்கள் பிறரிடம் உண்மையை பேச வேண்டும். பணி சார்ந்து புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உள்ளூர் பகுதியை மையப்படுத்தி பயணம் செய்யலாம். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும்.

கடகம்

காதலை மையப்படுத்திய பயணத்தை தொடங்க உள்ளீர்கள். வளர்ச்சி மற்றும் மாற்றம் சார்ந்த விஷயங்களுக்கு நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். பயணங்களின் மூலமாக புதிய நபர்களுடன் தொடர்பு ஏற்படும்.

சிம்மம்

இன்று நீங்கள் வெற்றி பெறவும், சாதனைகள் செய்யவும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தெளிவாகவும், நேர்மையாகவும் உரையாட வேண்டும். பயணங்களின் மூலம் பணி சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

உங்கள் உறவுகளில் நல்லிணக்கம் நிலவும் மற்றும் நெருக்கம் ஏற்படும். இரண்டு நபர்களுக்கு இடையிலான வாக்குவாதத்திற்கு நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருக்கலாம். பழைய முதலீடுகளில் இருந்து பலன் கிடைக்கும்.

துலாம்

உங்கள் மனம் திறந்து காதல் செய்யலாம். மன்னிப்பு மற்றும் கருணை குணங்களை கொண்டிருக்க வேண்டும். உங்கள் பணி சார்ந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும் மற்றும் நிதி பாதுகாப்பை உணருவீர்கள்.

விருச்சிகம்

பலமான நட்புகளை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் உயர்கல்வி பயில்வீர்கள் அல்லது வழிகாட்டிகளிடம் ஆலோசனை பெறுவீர்கள். பயணங்கள் அனுபவத்தை தரும்.

தனுசு

அன்புக்குரிய நபர்களுடன் உங்கள் பந்தத்தை பலப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். புத்தாக்கப் பணிகளை செய்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். புதிய இடங்களுக்கு பயணிக்கலாம்.

மகரம்

புதிய காதல் பந்தத்தை ஏற்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் வாழ்வில் சரியான நபரை சந்திக்க உள்ளீர்கள். உங்கள் துறை சார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசனை பெறலாம். சந்தேகம் அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையால் அவதி அடைவீர்கள்.

கும்பம்

உங்கள் காதல் வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்க இருக்கிறது. உங்கள் பணி சார்ந்த விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். இருப்பினும் உங்கள் திறன்களின் மீது சந்தேகம் ஏற்படலாம். உங்கள் சுய தேவைகள் குறித்து அக்கறை செலுத்தவும்.

மீனம்

உங்கள் பணி சார்ந்த வாழ்வில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தடைகளை கடந்து வர ஆழ்மன பலம் வேண்டும். பயணங்கள் மாற்றமிகு பலன்களை தரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

Related Posts

Leave a Comment