கபடி போட்டியில் ரவுடிகளை இறக்கும் பாண்டியம்மா… தப்பிப்பாரா ஷண்முகம்? அண்ணா சீரியல்

by Editor News

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா, கபடி போட்டியில் சண்முகத்தை பழி தீர்க்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி, பாண்டியம்மா, சனியன் ஆகியோர் கூட்டு சேர்ந்து கபடி போட்டியில் சண்முகத்தை பழி தீர்க்க பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கபடி போட்டியில் ரவுடிகளை இறக்கி சண்முகத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்று திட்டமிடுகின்றனர்.

இங்கே வீட்டில் ஷண்முகம் பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க பதறியடித்து ஓடி வரும் சிவபாலன் அப்பா, அத்தை ஏதோ பிளான் போட்டு இருப்பதாக சொல்ல எதுவாக இருந்தாலும் பார்த்துக்கறேன் என்று ஷண்முகம் சொல்கிறான். பரணி கோவிலில் வைத்து ரத்னாவுக்கும் வெங்கடேஷ்க்கும் திருமணம் செய்து விடலாம் என்று சொல்ல எங்க தங்கச்சிக்கு நான் இருக்கும் போது எதுக்கு யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணனும்? எல்லா நல்லபடியாக நடத்தி காட்டுவேன், உனக்கும் எனக்கும் நடந்த மாதிரி இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று சொல்ல பரணி சாப்பிடாமல் கோபித்து கொண்டு சென்று விடுகிறான்.

எல்லாரும் தூங்கிய பிறகு பரணி சாப்பாடு போட்டு சாப்பிட ஷண்முகம் அங்கு வந்து விட சாப்பிடாமல் போய் படுத்துட்டேன், பசிக்குது சாப்பிடுறேன் என்று சொல்ல சண்முகமும் சாப்பாடு போட்டு நீ சாப்பிடலைனு நானும் சாப்பிடல என்று சொல்லி சாப்பிடுகிறான். இப்படியெல்லாம் பேசி என் மனசை மாத்த நினைக்காதே, அது நடக்காது என்று சொல்கிறாள் பரணி. திடீரென ஷண்முகம் விக்க பரணி எரும மாடே என்று திட்டி விட்டு தண்ணீர் குடிக்க வைக்க இதை பார்த்த தங்கைகள் இவங்க சண்டை போடுறாங்களா? லவ் பண்றாங்களா? என கன்பியூஸ் ஆகின்றனர்.

அடுத்து சினிமா படங்களில் வர மாதிரி கடைசி நொடியில் உன் மனசு மாறும் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என்று ஷண்முகம் சொல்ல பரணி அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை என்று சொல்கிறாள். தொடர்ந்து மறுநாள் ஷண்முகம் வீட்டில் எல்லாரும் சந்தோஷமாக போகி கொண்டாட சௌந்தரபாண்டி வீட்டில் அந்த சண்முகத்தை இதே மாதிரி கொளுத்தணும் என வன்மத்தோடு இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment