இலங்கையில் இனி நெற்பயிர்ச்செய்கை ட்ரோன் மூலம்

by Editor News

நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நூறு ஆளில்லா விமானங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டத்தின் கீழ், நெல் பயிரிடப்படும் அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள 563 விவசாய சேவை மையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்குவதாகவும் விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவும், நெல் விதைக்கவும், நெற்பயிர்களை அளக்கவும், நோய்களைக் கண்டறியவும் முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment