பற்பசை, சோப்புகள் மற்றும் உடல் ஸ்க்ரப்களினால் ஏற்படும் தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி, முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளிட்ட பல தோல் நிலைகளுக்கு கார்ன்ஃப்ளார் தீர்வளிக்கின்றது.
அந்த வகையில் கார்ன்ஃப்ளார் மா பேக்கை முகத்திற்கு பயன்படுத்துவதால் வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதனை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.
1. கார்ன்ஃப்ளவரின் மாவுச்சத்து, கடற்பாசி போன்றவைகள் முகத்திலுள்ள எண்ணெய் பசையை உறிஞ்சிகின்றன. பளபளப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாது வெடிப்புகளைத் தடுக்கவும் உதவியாக இருக்கின்றது.
2.சூரிய ஒளி, தடிப்புகள் மற்றும் பிற தோல்களில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க கார்ன்ஃப்ளவர் உதவியாக இருக்கின்றது. ஏனெனின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகமாகவுள்ளது.
3. எப்போதும் இளமை மாறாக இருக்க வேண்டுமா? அப்படியானவர்கள் கார்ன்ஃப்ளார் மாவில் பேக் செய்து பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சத்துக்களை வழங்குகின்றது.
4. நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களின் தோற்றத்தை குறைத்து முகத்தை அழகாக காட்டும்.
5. அழற்சியின் போது ஏற்படும் சிவப்பையும் இது இல்லாமல் ஆக்குகின்றது.