முருங்கை கீரை அடை ரெசிபி.!

by Editor News

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 1 கப்

கடலைப்பருப்பு – 1/2 கப்

துவரம்பருப்பு – 1/2 கப்

முருங்கை கீரை – தேவையான அளவு

வெங்காயம் – 2 நறுக்கியது

பூண்டு – தேவையான அளவு நறுக்கியது

பச்சை மிளகாய் – 2 (தேவைக்கேற்ப)

மஞ்சள் தூள் – 1/2 டிஸ்பூன்

வரமிளகாய் – 5

கருவேப்பிலை – தேவையான அளவு

பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 2 மணி நேரம் ஊரவைத்து கொள்ளவேண்டும்.

அனைத்தும் நன்கு ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் மஞ்சள் பொடி, பெருங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்தக்கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் முருங்கை கீரை, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

அடுத்ததாக அடுப்பில் தேசைக்கல்லை வைத்து அது நன்கு காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மாவை சிறிதாக எடுத்து தேவை வடிவில் அடையாக சுடவும்.

ஒருபுறம் வேகும்போது அதன் நடுவில் ஓட்டை விட்டு அதில் சிறிது எண்ணெய் விடவும்.

பிறகு அடையை திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான முருங்கை கீரை அடை தயார்.

இந்த ஆரோக்கியமான அடையை தேங்காய் சட்னி, வெல்லம், இட்லி மிளகாய்பொடியுடன் சேர்த்து அனைவருக்கும் சுட சுட பரிமாறலாம்.

Related Posts

Leave a Comment