இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

by Editor News

இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியாயில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதுடன் இதன் பாதிப்பு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் மக்களைப் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Comment