“போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர்!” – அமைச்சர் சிவசங்கர்

by Editor News

“அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து தொழிலாளர்களும் கூடுதல் சம்பள உயர்வு பெற்று மகிழ்ச்சியோடு உள்ளனர்; நிதிச்சுமை காரணமாகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை; அரசியல் காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர்.

மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிற்சங்கங்களிடம் அவகாசம் கேட்டுள்ளோம்;தமிழ்நாடு அரசின் நிதி நிலை சீரான பின் அகவிலைப்படி கோரிக்கையை நிறைவேற்றுவோம்; அகவிலைப்படி உயர்வை வழங்குவதற்கு கால அவகாசம் தான் கேட்கிறோம்; போராடுவது உங்களுடைய உரிமை, ஆனால் மக்களுக்கு இடையூறு இன்றி போராட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க கூட்டமைபின் தொழிலாளர்களே பணிக்கு வந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். தங்கள் அமைப்பு பலத்தை காட்டுவதற்காக போராட்டதை அறிவித்த கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போது அதனை கைவிட முடியாமல் தவிக்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment