நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது- சிஐடியு செளந்தரராஜன்

by Editor News

நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சிஐடியு செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு சங்க தலைவர் செளந்தரராஜன், “போக்குவரத்து ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள் எதையும் ஏற்க முடியாது என அரசு தெரிவித்துவிட்டது. இது நியாயமற்ற பதில். போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக இந்த அரசு பார்க்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எங்களிடமிருந்து பிடித்து வைத்துக் கொண்ட பணத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். எனவே வேலைநிறுத்ததை திரும்பப் பெற முடியாது. தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது. நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்.

Related Posts

Leave a Comment