மேஷம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். வணிகத் துறையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் வெற்றி பெறுவார்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய வேலைகளை இன்று தொடங்குவதைத் தவிர்க்கவும் இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகம் இருக்கும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பேச்சை குறைக்கவும்.
ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு மங்களகரமான நாளாகவும், சிறந்த பலன்களை அளிக்கும் நாளாகவும் இருக்கும். வேலை செய்யும் இடங்ககளில் வெற்றியும், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். இன்று சோம்பேறித்தனத்தை தவிர்க்காவிட்டால் முக்கிய வேலைகள் தடைபடலாம்.
மிதுனம்
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வியாபாரிகள் தங்கள் வணிக நடவடிக்கைகளில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியைத் தரும். இன்று புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இன்று வேலைப்பளு அதிகம் இருக்கும் என்றாலும் ஆனால் உங்கள் முயற்சியால் அனைத்து வேலைகளையும் முடிப்பீர்கள். சுயமாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலனளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கடகம்
இன்றைய நாள் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய கலவையான நாளாக இருக்கும். பணியிடத்தில் அதிக வேலைகள் இருக்கும், புதிய பணிகளின் பொறுப்புகள் கிடைக்க கூடும் என்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் நிதி ஆதாயம் இருக்கும். இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும், இல்லையெனில், வீண் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம். ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய நாள் உங்களுக்கு சுமாராக இருக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் பெரிய லாபங்கள் இருக்காது. ஊழியர்கள் பணியிடத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கடின உழைப்பால் உங்கள் வேலையை செய்து முடிக்க வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கன்னி
இன்றைய நாள் உங்களுக்கு நல்லபடியாக அமையும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் பணவரவும், ஊழியர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் விடா முயற்சியால் உங்கள் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். முதலீடு விஷயங்களில் அவசரம் காட்டாதீர்கள்.
துலாம்
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும். தொழில் துறையில் உள்ளோருக்கு லாபம் கிடைக்கும் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வெகுமதி கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால் வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். இன்று நிலம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு நிதி ரீதியாக ஆதாயம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நிறைய வேலைகள் இருக்க கூடும் என்பதால் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடையலாம். இன்று உங்களது அதிகப்படியான ஆசைகளை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது நஷ்டத்திற்கு வழிவகுக்கும்.
தனுசு
இன்றைய நாள் உங்களுக்கு கலவையான நாளாக இருக்கும்.சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்களது பாரங்களை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்வார் என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும், ஆனால் இறுதியில் உங்கள் கடின உழைப்பால் உங்கள் வெற்றி பெறுவீர்கள். முதலீட்டு முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். குறிப்பாக நீதிமன்ற விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வேலையைத் தொடங்க இன்று சரியான நாள் அல்ல. உங்கள் பேச்சால் யாரையும் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள்.
கும்பம்
இன்றைய நாள் நீங்கள் வெற்றி மற்றும் புகழ் பெறுவீர்கள், மேலும் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளும் மிக எளிதாக முடிவடையும். பணியிடத்தில் சிலர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக லேசான மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு இன்று நல்ல வரன் அமையும். இன்று நிலத்தில் செய்யும் முதலீடு லாபகரமாக இருக்கும்.
மீனம்
பணியிடத்தில் இன்று நிறைய வேலைகள் இருக்கும் மற்றும் சக ஊழியர்களின் உதவியுடன் நீங்கள் அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள். அதிக வேலைகள் காரணமாக சோர்வாக உணருவீர்கள். சமூக சேவைகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.