தேவையான பொருட்கள் :
புடலங்காய் – 1
தக்காளி – 1 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை :
முதலில் புடலங்காயை நன்றாக அலசி அதன் தோலை நீக்கிகொள்ள வேண்டும்.
அதன் பிறகு புடலங்காயை நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் அதில் நல்லெண்ணையை ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம் போன்றவற்றை போடவும்.
கடுகு வெடித்த பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அதனுடன் பூண்டை நன்றாக இடித்துப் சேர்த்துக்கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்க்கவேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக கிளறிவிட்ட பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துள்ள தக்காளியை புடலங்காயுடன் சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறி சிறிது எண்ணெய் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.
கடைசியாக அடுப்பில் இருந்து இறக்கும் பொழுது பொடியாக நறுக்கிய ஒரு கைப்புடி கொத்தமல்லி தழையை தூவி இறக்கினால் சுவையான புடலங்காய் தொக்கு ரெடி.
இந்த புடலங்காய் தொக்கை நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் சேர்த்து பரிமாறலாம்.