தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
பூண்டு – 5 பல்
காய்ந்த மிளகாய் – 4
வறுத்த வேர்க்கடலை – 1 கப்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை :
வெண்டைக்காயை நன்கு கழுவி எடுத்து அதை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து பொடியாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
வெண்டைக்காய் நன்றாக வதங்கிய உடன் அதில் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்
ஐந்து நிமிடம் நன்கு வெண்டைக்காயை கலந்துவிட்ட பிறகு அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால் ருசியான வெண்டைக்காய் பொரியல் ரெடி…