என்னை மன்னிச்சிடுங்க.. போட்டியாளர்களின் காலில் விழுந்த பூர்ணிமா.!

by Editor News

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த சீசனிலும் சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஷ்ணு விஜய், அர்ச்சனா, மணி, விஜய் வர்மா, தினேஷ் ஆகியோரே உள்ளனர். இவர்களில் வெற்றி பெறபோவது யார்? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது.

பணப்பெட்டியின் தொகை அதிகரித்து ரூபாய் 16 லட்சம் வந்த நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் நான் உங்களை தாக்கியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் என அனைவரின் முன்பும் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment