141
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி கடையில் திருட்டு நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் அதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் பிரித்தானிய காவல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
குறிப்பாக பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் அதிகம் என்றும் காவல் துறை அமைச்சர் கிறிஸ் பில்ப் தெரிவித்துள்ளார்.
சில்லறை வர்த்தக கடைகளில் திருட்டுகள் பிரித்தானியாவில் பணவீக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பொலிஸாரின் கவனக்குறைவு ஆகியவற்றால் இடமபெருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டை விட 10 முக்கிய நகரங்களில் இந்த ஆண்டு கடைத் திருட்டுகள் சராசரியாக 27 விகிதம் உயர்ந்துள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் 12 மாத காலப்பகுதியில் வணிக நிறுவங்களுக்கு 1.76 பில்லியன் பவுண்ட் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.