சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 குறைந்து, 47,320க்கும் , கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 5,915க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2000 ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.