200கி.மீ பயணம்: விரைவில் வருகிறது 2 நபர் மட்டுமே அமர்ந்து செல்லும் Electric Car

by Editor News

ஆட்டோவின் வடிவமைப்பில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய வகையில் Electric Car-ரை அறிமுகம் செய்துள்ளது Gensol.

டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கு ஏற்றவாறு பல்வேறு அம்சங்களுடன் கூடிய எலக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகின்றன.

இந்த பதிவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய எலக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்வோம்.

Gensol Electric Vehicles நிறுவனம் இப்புதிய காரை, மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பாவில் இருப்பது போன்று மிக சிறிய அளவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்படுகிறது, இரண்டு கதவுகள் உண்டு.

முன்பக்கம் பெரியதாக LED DRL மற்றும் Halogen விளக்குகளுடன் செவ்வக வடிவ Headlight உள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தாலே, 200கி.மீ வரை எந்தவித தடங்கலும் இல்லாமல் செல்லலாம் என Gensol நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 80 கி.மீ வரையிலான வேகத்தில் செல்லலாம், கார் cabin உள்ளே Infotainment system, Manual Aircon கட்டுப்பாடுகள் மற்றும் கருப்பு நிற தரைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் Moon Roof, Cloud Analytics போன்ற புதுவிதமான வசதிகளும் உள்ளடங்கியுள்ளது.

இதுகுறித்து பேசிய Gensol நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரான அன்மோல் சிங், சுற்றுசூழலை பாதிக்காத, நகர்ப்புற பயன்பாடுக்கு உட்பட்ட வகையில், மற்றும் புகை வெளியீடுயின்றி போக்குவரத்தை வழிநடத்துவதே எங்களது நோக்கம்.

இந்த காரின் அனைத்து பாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment