ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்வு!

by Editor News

ஜப்பானில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் நேற்றைய தினம் 7.6 என்ற ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்நில நடுக்கத்தினால் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமாக கட்டிடங்களும் சேதமடைந்தன.

இதேவேளை இந்நில நடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில் குறித்த சுனாமி எச்சரிக்கை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடனும், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment