எளிதில் கிடைப்பதுடன், விலை மலிவானதும், எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது.
பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிப்பாகவே இருக்கும்.
பப்பாளியின் நன்மைகள்:
பப்பாளியில் அதிக ஆக்ஸிஜனேற்றிகளும் இறந்த உயிரணுக்களின் மேற்பரப்பை உடைப்பது மட்டுமின்றி ஈரப்பதமாக்கி துளைகளை அழித்து முகத்தில் சுருக்கங்களைத் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்க இந்த பப்பாளியில் உள்ள fiber ஆனது உதவுகிறது.
கண்பார்வையை சீராக வைத்திருக்க Lutein, zeaxanthin, வைட்டமின்- ஏ, மற்றும் வைட்டமின்-சி நிறைந்த இந்த பப்பாளி பயன்படுகிறது. தாதுக்கள், வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண்புரைகளுக்கு எதிராக போராடுவதில் பப்பாளியானது முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய நோய் வராமல் தடுக்க இந்த பப்பாளியில் உள்ள fiber, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் உள்ளடக்கமானது பெரும் பங்களிக்கிறது.
உயர் இயற்கை சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் உள்ளடக்கமான இந்த பப்பாளி இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் பெரும் பங்களிக்கிறது.
Beta cryptoxanthin ஆனது இந்த பப்பாளியில் உள்ளடங்கியதால் புற்றுநோய் உயிரணுக்களை வளர விடாமல் உங்களை பாதுகாக்கிறது.