வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான தனது நோக்கங்களை நிர்ணயித்த கிம் ஜோங் உன், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆண்டு இறுதி கூட்டத்தில் பேசிய போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது அணுசக்தி லட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை எனவும் கூறினார். அத்துடன், தென்கொரியா தனது நாட்டை எதிரியாகக் கருதுகிறது எனவும் கூறினார்.
வடகொரிய தலைவர் இது போன்ற ஒரு விடயத்தைச் சொல்வது இதுவே முதல் முறையாகத் தோன்றுகிறது மற்றும் இது கொள்கையில் அதிகாரப்பூர்வ மாற்றத்தைக் குறிக்கிறது.
நடைமுறையில் சில ஆண்டுகளாக ஒற்றுமைக்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், எந்த முன்னேற்றமும் சிறிய முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையில் உள்ளன. கடந்த மாதம், உளவு செயற்கைக்கோள் ஏவுதலைத் தொடர்ந்து, இராணுவ பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் தென்கொரியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை வடகொரியா முறித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.