120
90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ்.
இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் நபராக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் விஷ்ணு. இன்னும் 2 வாரங்கள் மீதம் இருக்கும் பட்சத்தில் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இதில், கண்டிப்பாக பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் கூறுகிறார்கள்.
அது எப்படி என்ன காரணம் என விசித்ரா கேட்க, அதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அர்ச்சனாவிற்கே அது என்ன காரணம் என்று தெரியாது என பூர்ணிமா கூறுகிறார்.