நரைமுடியை தற்காலிகமாக மறைக்கவும் முடியின் கருமை நிறத்தை அதிகரிக்கவும் உதவும் இயற்கை பொருள்களில் காபித்தூளும் ஒன்று. காபியில் உள்ள காஃபின் முடி வளர்ச்சியை தூண்டும் சிறந்த பண்புகளை கொண்டுள்ளது. இது நரைமுடியை தடுப்பதோடு உச்சந்தலையை சுத்தம் செய்கிறது, முடி உதிர்தலை கட்டுப்படுத்த செய்கிறது. இந்த காபித்தூளை நரைமுடி மறைக்கும் ஹேர் மாஸ்க்- ஆக எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
கூந்தலுக்கு காபி பவுடர் பயன்படுத்தலாமா?
காபிதூள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் மேற்பூச்சாக பயன்படுத்துவதால் முடி உதிர்வது நின்று மீண்டும் வளர்வதாக மருத்துவ ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது., இது கூந்தலில் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது. இது மன அழுத்தத்தை குறைப்பதோடு முடி வளரவும் உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கி துளைகளை திறப்பதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. உச்சந்தலையை சுத்தம் செய்யவும் உதவுகிறது.
இயற்கையாக முடி நிறத்தை மேம்படுத்த காபித்தூள் உதவுமா?
நரைமுடி அல்லாதவர்களும் கூட காபித்தூள் பயன்படுத்தலாம். இது முடி கருமையை அதிகரிக்கிறது. இளம் வயதிலேயே நரைமுடி இருப்பவர்கள் காபி தூளை பயன்படுத்துவதன் மூலம் நரைமுடிக்கு இயற்கையாக சாயம் இட முடியும். இதை பயன்படுத்துவது எளிது. காபி அடர் நிறம் கொண்டது. இது சாயமிடலுக்கு இயற்கையான ஒன்று. இதில் இராசயன பொருள் இல்லை என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.
நரைமுடி போக்கும் காபித்தூள் ஹேர் பேக் ரெசிபி :
தேவை
காபித்தூள் – 2 டீஸ்பூன்
நெல்லிக்காய் தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
என்ன செய்வது
சிறிய கிண்ணத்தில் காபித்தூள் எடுத்து, நெல்லிக்காய் பொடி எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். இவை இரண்டும் சேர்ந்து பேஸ்ட் போல் குழைக்க தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். பிறகு மெல்லிய துணியில் அதை வடிகட்டி கொள்ளவும் கைகளால் நன்றாக தேய்த்தால் அவை கீழ் இறங்க செய்யும் இப்போது பேஸ்ட் தயார்.
எப்படி பயன்படுத்துவது
கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்க முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலை அனைத்திலும் இவற்றை பயன்படுத்துங்கள். பிறகு 40 நிமிடங்கள் கழித்து முடியை ஓடும் நீரில் அலசி எடுங்கள்.
காபி ஹேர் மாஸ்க் பக்கவிளைவு உண்டு செய்யுமா?
காபித்தூள் இயற்கையான பொருள் என்பதோடு தீங்கு விளைவிக்காததும் கூட. இதை தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் பயன்படுத்தலாம்.
வாரம் இரண்டு நாட்கள் இதை செய்து வருவதன் மூலம் இளநரை முடி படிப்படியாக இழந்த நிறத்தை பெறும். குறைந்தது அவை மேலும் வெள்ளையாகாமல் தடுக்கப்படும்.
காபித்தூள் முடி சாயத்துக்கு ஏற்ற ஒன்று. நரைமுடியை பழுப்புநிறமாக மாற்றுகிறது, முடி உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதால் முடி வளரவும் செய்கிறது.
காபி ஹேர் மாஸ்க் பயன்படுத்துவதில் நரைமுடி மறைந்தாலும் அவை தற்காலிகமானவை என்பதால் அடிக்கடி பயன்படுத்த வேண்டி இருக்கும். பாதிப்பு இல்லாத கூந்தலை பெற பயன்படுத்தி தான் பாருங்களேன்.