ஐபிஎல் பாணியில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் 10 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடராக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி தொடங்குகிறது. 2ம் தேதி தொடங்கி 9ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவி பணியாளர்கள் ஆறு பேர் ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத்தொகை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ISPL T10 கிரிக்கெட் லீக்கின் சென்னை அணியின் உரிமத்தை பெற்றார் நடிகர் சூர்யா. இதனை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார் . இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 என்பது, சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆகும். இதன் குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தெரிவித்துள்ளது.