திருவாதிரை களி வீட்டில் செய்வது எப்படி..
தேவையான பொருட்கள்
பச்சரிசி ரவை – 1 கப்
பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதளவு
செய்முறை:
1. முதலில் பாசி பருப்பு மற்றும் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும்.
2. அதன் பிறகு மிக்ஸியில் பருப்பு, அரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
4. வெல்லம் நன்கு கரைந்ததும் அதனை வடிகட்டி, கொதிக்க விட வேண்டும்.
5. பின்பு, 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவை அதனுடன் சேர்க்க வேண்டும்.
6. இப்போது தீயை கொஞ்சம் சிமிலில் வைத்து விட்டு அரிசி கலவை கட்டி சேராமல் நன்கு கிளற வேண்டும். தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
7. சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி தூவி கிளறி விட்டு இறக்க வேண்டும். நெய் அதிகமாக ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும். நெய் பிடிக்கதவர்கள் போட வேண்டாம்.
இப்போது சுவையான திருவாதிரை களி தயார்.
களிகுழப்பு செய்முறை
தேவையான பொருட்கள்
மளிகை பொருட்கள்:
1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி
1-1/2 கப் து.பருப்பு
2 ஸ்பூன் க.பருப்பு
2 ஸ்பூன் உ.பருப்பு
4 ஸ்பூன் தனியா
1/2 ஸ்பூன் வெந்தயம்
எலுமிச்சை அளவு புளி
5-10 எண்ணிக்கை காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
2 ஸ்பூன் சாம்பார் பொடி
5 ஸ்பூன் சமையல் எண்ணெய்
காய்கறிகள்:
½ கப் தட்டப்பயறு
½ கப் பீன்ஸ்
¼ கப் அவரைக்காய்
¼ கப் கொத்தவரை
1 கப் சுரைக்காய்
1 கப் பீர்க்கங்காய்
1 கப் வெள்ளை பூசணி
½ கப் வாழைக்காய்
3 பச்சை மிளகாய்
1 தக்காளி
கருவேப்பிலை, கொத்தமல்லி,
செய்முறை
1. ஒரு கப் து.பருப்பை குக்கரில் சுடுத்தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி போட்டு வேக வைத்துக்கொள்ளவும்…
2. தனியா, க.பருப்பு, மிளகாய், வெந்தயம், தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகி, கருவேப்பிலை, உ.பருப்பு, பெருங்காயம், வெந்தயம், தக்காளி, ப.மிளகாய் போட்டு தாளித்துக்கொள்ளவும்.
4. கட் செய்த காய்கறிகள், சாம்பார் பொடி சேர்ந்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
5. புளியை தண்ணீரில் கரைத்து சேர்த்து, காய்கறிகள் வெந்து வரும் வரையில் கொதிக்கவிடவும்.
காய்கறிகள் வெந்தபின்னர், வேக வைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுதை சேர்ந்து நன்றாக கொதிக்கவிடவும்.
7.இறுதியாக மீண்டும் கடுகு, தேங்காய் ஆகியவற்றை தாளித்து குழம்பில் ஊற்றவும்.