சுனாமி கோரதாண்டவத்தின் 19வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

by Editor News

தமிழகத்தில் இன்று சுனாமி தாக்கிய 19 ஆவது நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. சுனாமி நினைவு தூணில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் ஆழி பேரலை என்று சொல்லப்படும் சுனாமி கடந்த 24 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி மக்களை உலுக்கி எடுத்தது. இந்தோனேசியாவின் சுபத்ரா பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் இந்தியா, இந்தோனேசியா ,இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி பேரலை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயினர்.

அந்த வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அதற்கான காயமும் , வடுவோம் மறையாமல் உள்ளது. இந்நிலையில் இன்று சுனாமி 19ஆம் ஆண்டு நினைவுதினத்தில் கடலோரப் பகுதியில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. பொதுமக்கள் பால் ஊற்றி , மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

Related Posts

Leave a Comment